ஐசுவரியம் என்றால் பொருள், ஆஸ்தி, சொத்து, தங்கம், பணம் என்று பல புரிதல்கள் நம்மிடையே உள்ளன.
இயேசு தனது ஊழியத்தில் கூறுகிறார்
பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை. உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும். - (மத்தேயு 6:20-21).
பரலோக பொக்கிஷம் என்றால் என்ன? தங்கமா? நிறைய பணமா? அல்லது நிலம், வீடு போன்றவையோ?
இவை யாவும் இப்புவியில் ஐசுவரியம் என்று கருதப்படுகிறது. பரலோகத்தின் ஐசுவரியம் என்பது ஒன்றே ஒன்று தான். இயேசுவே அதற்கு விடையை இரண்டு பாகமாக கூறியுள்ளார்.
மாற்கு 10:21 அவனிடத்தில் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றிவா என்றார்.
உண்டானவைகள் எல்லாம் கொடு. இதன் உட்பொருள் என்ன தெரியுமா? ஏழைகளுக்கு உன் ஐசுவரியம் எல்லாம் கொடுத்து விடு. எனக்கு, என் பிள்ளைகளுக்கு, அடுத்த வேளை சோற்றிற்கு, என் பெற்றோரின் நலனுக்கு என்று சேர்த்து வைக்காதே. ஏழைகள் பசியாறக் கொடு என்பதே. அப்போது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்.
பரலோகத்தில் பொக்கிஷம் சேர்த்தல் என்றால் இது தான் இயேசுவின் சொல்.
அந்த விடையின் அடுத்த பகுதியை காணுங்கள். பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றிவா.
சிலுவை என்றால் என்ன? சிலுவை என்றால் பாடுகள், சாபம், மரம் என்று பலர் பிரசங்கிப்பர். இதை இயேசு சொன்ன போது சிலுவையில் அவர் மரிக்கவில்லை. சிலுவை என்றால் அக்காலத்தில் செய்யக் கூடாத காரியம் செய்தவர்களை தண்டிக்கும் முறை.
அதை ஏன் தூக்கிக் கொண்டு தன்னை பின்பற்ற கூறுகிறார் இயேசு?
அதாவது, ஒரு சபிக்கப் பட்டவனைப் போல, ஒரு குற்றம் புரிந்தவனைப் போல, கூனி குறுகி உன்னை தாழ்த்தி அவர் பின்னால் போகச் சொல்கிறார்.
தாழ்மை என்பது ஐசுவரியம் இருந்தால் எளிதில் வராது. இயேசு சொல்கிறார் "தன்னைத் தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்" லூக்கா 14:11
வேதம் சொல்கிறது
ஏழைக்கு இரங்குகிறவன், கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான்.
இயேசு சொல்கிறார்
கைம்மாறு கருதாமல் காசு கடன் கொடுங்கள். திரும்ப வரும் என்று நீங்கள் ஈகை செய்தால் என்ன பயன்?
இப்போது இந்த பகுதியின் தலைப்பை பாருங்கள். ஐசுவரியம் ஆசீர்வாதமா?
மனத்தாழ்மையும், ஏழைக்கு இரங்கும் உள்ளம் இவை இரண்டும் இருந்தாலே ஐசுவரியம் ஆசீர்வாதமாக உள்ளது.
ஒரு சிறு நிகழ்வை காணலாம்.
ஒரு தேவ மனிதர் பேருந்தில் பயணிக்கிறார். அவர் தனது பையில் சொற்ப பணம் இருக்கிறது. அந்த பேருந்தில் ஒரு திருடன் ஏறி அவருடைய பணத்தை திருடிவிடுகிறான். பணம் எடுப்பதை உணர்கிறார் தேவ மனிதன்.
இந்த நேரத்தில் நீங்கள் அந்த தேவ மனிதரின் இடத்தில் இருந்தால் என்ன செய்வீர்கள்? (கீழ்வரும் ஐந்து விடைகளை ஒவ்வொன்றாய் படித்து எந்த விடை நீங்கள் செய்வீர்களோ அதில் நிறுத்தி அடுத்தப் பக்கம் பாருங்கள்)

No comments:
Post a Comment