இது ஒரு மறைபொருள் என்பதாகக் கூறுவதை விட, இதை அறைகூவலாகவே பார்க்கிறார் ஆவியானவர்.
இன்று நடக்கும் எழுப்புதல் என்பது வரலாறு காணாத அளவிற்கு உள்ளதென்பதை மறுக்க முடியாது. பலர் இயேசுவை பற்றி (அல்லது பின்பற்றுவது போல போக்குக் காட்டி) வருகின்றனர். சில நூறு பேர் மட்டும் இருந்த திருச்சபைகள் இப்போது ஆயிரம், இலட்சம் என்று வளர்ந்து வருகிறது.
ஆத்தும பசி என்பது பலருக்கு இருந்தாலும், அந்த பசியை தீர்க்க போதகர்களால் முடியவில்லை என்பது நிதர்சனமான உண்மை. கூட்டம் அலைமோதும் திருச்சபைகளில் ஐந்து அல்லது அதற்கு மேலான ஆராதனைக் கூட்டங்கள், ஞாயிறுதோறும் நடக்க, அவர்கள் செய்வது எல்லா ஆராதனைக் கூட்டத்திற்கும்
1.அதே பாடல்கள்
2. அதே பிரசங்கம்
எனக்கு அறிமுகமான சிலர் என்னிடம் கூறியது இன்னும் வேதனை அளிக்கின்றது.....
இரண்டாம் ஆராதனைக்கு செல்வோம். எப்படியும் சபையின் இடத்திற்கு சேர காலத்தாமதமாகிவிடும், நாங்கள் செல்லும் போது பிரசங்கம் ஆரம்பித்து விடும். பிரசங்கத்தை கேட்போம். அடுத்த ஆராதனையில் பாடல்கள் பாடிவிட்டு கிளம்பிவிடுவோம்.
இது சரியான அனுகுமுறையா என்றால், இல்லை. ஏன்?
கூட்டம் கூட்டுவது என்பது எதற்கு? தேவனை ஆராதிப்பதற்கா? அல்லது வேறு எதற்காக?
அதே பாடல்கள், அதே பிரசங்கம் என்று இருந்தால், தேவனின் ஜனம் தீராத தாகத்திலேயே இருந்து விடுகின்றனர்.
இந்த தீராத தாகம் தீர்ப்பவர் போதகர்கள் என்று எண்ணினால், அது தான் முதல் தவறு. போதகர்களை விக்கிரகமாக ஆக்கும் முயற்சி.
தேவனை ஆராதிக்க திருச்சபை வளாகத்திற்கு கூட்டி வாருங்கள் என்று சொல்லும் போதகர்கள் அறிந்து கொள்ளாத இரகசியம் ஒன்று உண்டு.
I கொரிந்தியர் 3:17 ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக்கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்.
ஒவ்வொரு கிறித்தவனும், பரிசுத்த ஆவியின் ஆலயம். ஏதோ திருச்சபை வளாகமே ஆலயம் என்று கூறுவது தவறு.
இயேசு தன்னுடைய ஊழியத்தில் கூறுகிறார்

- யோவான் 4:21 ...எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது.
எங்கும் தொழுதுகொள்ளும் காலம் என்றால், ஏன் இந்தத் திருச்சபைக்குத் தான் செல்லவேண்டும் என்று போதகர்கள் வற்புறுத்துவது? ஆவியின் அபிஷேகம் எங்கும் கிடைக்குமல்லவா? ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுதல் தானே சரியான தொழுகை?
தேவனின் இந்த மறைபொருள் பல தேவமனிதருக்கு வெளிப்படவே ஆவியானவர் எழுத வைத்திருக்கும் பகுதி இது.
இயேசுவின் ஊழியமா, அப்போசுதலரின் ஊழியமா என்ற தலைப்பில் ஏன் இப்படி தொழுகை குறித்து ஆவியானவர் பேச வேண்டும்?
சற்றே கூர்ந்து நோக்கினால், இன்றைய திருச்சபைகள் முதல் நூற்றாண்டில் இருந்த அப்போசுதலர் ஊழியம் செய்த திருச்சபையைப் போலவே உள்ளன,
பவுல் கூறுகிறான் காணுங்கள்
1 கொரிந்தியர் 1:12-13 உங்களில் சிலர்: நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும், நான் கேபாவைச் சேர்ந்தவனென்றும், நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால், நான் இப்படிச் சொல்லுகிறேன். கிறிஸ்து பிரிந்திருக்கிறாரா? பவுலா உங்களுக்காகச் சிலுவையிலறையப்பட்டான்?
இந்தப் பிரிவினையே இப்போது விஸ்வரூபமாக பெந்தகொஸ்தே, ப்ராடஸ்டன்ட், அசெம்பிலி ஆப் காட், மெதடிஸ்ட், லூத்தரன், அட்வென்டிஸ்ட், CSI, CNI என்று திருச்சபை, பிரிந்து இருக்கக் காரணம்.
இயேசுவின் ஊழியம் செய்வோர், இயேசுவையே பிரசங்கிக்க வேண்டும். பலர் நாங்கள் அப்போசுதல ஊழியம் செய்கிறோம் என்று கூறிக் கொள்கிறார்கள்.
இவர்கள் செய்யும் முதல் தவறு, இயேசுவின் வாழ்க்கையை முழுதாக படித்து, அவரின் ஊழியத்தை முழுமையாக உணராதவர்களே நாங்கள் அப்போசுதல ஊழியம் செய்கிறோம் என்று கூறுபவர்கள்.
எபிரேயர் 3:1 ஐ வாசித்தால்
எபிரெயர் 3
இப்படியிருக்க, பரம அழைப்புக்குப் பங்குள்ளவர்களாகிய பரிசுத்த சகோதரரே, நாம் அறிக்கைபண்ணுகிற அப்போஸ்தலரும் பிரதான ஆசாரியருமாயிருக்கிற கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப்பாருங்கள்;

இயேசுவையே அப்போஸ்தலர் என்று எபிரேயர் நிரூபம் கூறுகிறது.
இன்னொரு மிக வேதனையான காரியம் ஞானஸ்நானத்தால் திருச்சபை பிரிந்து இருப்பது.
தெளிப்பு ஞானஸ்நானம், முழுக்கு ஞானஸ்நானம், சிறுவயது ஞானஸ்நானம், பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயரல்லாத ஞானஸ்நானம், இயேசுவின் பெயரில் ஞானஸ்நானம்.
ஒவ்வொரு சபையும், தாங்கள் செய்வதே சரி என்று கூறி மீண்டும் மக்களை ஞானஸ்நானம் எடுக்க வைப்பதும் நடந்து வருகிறது.
இயேசுவின் ஊழியத்தை பாருங்கள், அவர் ஞானஸ்நானம் கொடுக்க வில்லை. அவரின் சீஷர்களே கொடுத்தனர். யோவான் ஸ்நானகன் கொடுத்த ஞானஸ்நானத்திலும் எந்தப் பெயரும் போடவில்லை.
பின் வந்த சுவிஷேத்தில்
பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுங்கள் என்று இயேசு சொன்னதாக மத்தேயு குறிப்பிடுகிறார்
மத்தேயு 28:19-20 ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.
லூக்காவிலும் யோவனிலும் இயேசு ஞானஸ்நானம் கொடுக்கச் சொன்னதாக இல்லை. மாற்கு சுவிசேஷத்தில் பெயர் கொடுக்கப் படவில்லை.
அப்போசுதல நடபடிகளில் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்ததாக குறிப்பிடப் பட்டிருக்கின்றது.
அப்போஸ்தலர் 2:38 பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.
ஞானஸ்நானம் என்பது ஒரு நீதியே. இயேசு தான் ஞானஸ்நானம் பெற்ற போது, நீதி நிறைவாக இப்போது இடங்கொடு என்று யோவான் ஸ்நானகனிடம் கூறுகிறார்.
நீரில் மூழ்கி, இந்த மாம்சத்திற்கு செத்து, சிலுவையில் அறையப்பட்ட இயேசு உயிர்த்தெழுந்தது போலே உயிர்த்தெழுவதே ஞானஸ்நானம்.
ரோமர் 6:3-4 கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக, ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா? மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.
இந்த இரகசியத்தை அறியாதவர்கள் தான் ஞானஸ்நானத்தை குறித்த வீண் சண்டையிடுகிறார்கள்.
இப்போது சொல்லுங்கள், நீங்கள் செய்வது இயேசுவின் ஊழியமா? அல்லது அப்போசுதல ஊழியமா?
தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் சேர்ந்து ஊழியம் செய்ய உங்களால் கூடாது என்று இயேசுவின் சொல்லை தியானியுங்கள்.
இந்தப் பகுதி யாரையும் குற்றப்படுத்த அல்ல. எல்லோரும் கர்த்தருடைய சித்தத்தை அறிந்து, தேவனின் பிள்ளைகளாக, சண்டையிடாமல் இயேசுவின் ஊழியத்தை செய்வதே தேவத் திருவுளம்.
தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
அடுத்த மறைபொருள்: நீங்கள் கொண்டிருப்பது பரிசுத்த ஆவியா? எலியா, பவுல், அல்லது மற்ற தூயரின் ஆவியா?
அடுத்த மறைபொருள்: நீங்கள் கொண்டிருப்பது பரிசுத்த ஆவியா? எலியா, பவுல், அல்லது மற்ற தூயரின் ஆவியா?
No comments:
Post a Comment