தேவனுடைய மறைபொருள்களில் தேவ ஆவியானவர் என்னை எழுதப் பணித்த கடைசி மறைபொருள் இது.
இரு உவமைகளை இயேசு கூறிவிட்டு
அழைக்கப்பட்டவர்கள் பலர் ஆனால் தெரிந்து கொள்ளப்பட்டவர் சிலர் என்று கூறுகிறார்.
இதன் மறைபொருளை நாம் இன்று அறிய இருக்கிறோம்.
முதல் உவமை மத்தேயு 20ல் திராட்சை தோட்டத்திற்கு வேலைக்காரர் சேர்க்கும் முதலாளி குறித்தது.
இந்த உவமையை முதலில் காண்போம்.
இரு உவமைகளை இயேசு கூறிவிட்டு
அழைக்கப்பட்டவர்கள் பலர் ஆனால் தெரிந்து கொள்ளப்பட்டவர் சிலர் என்று கூறுகிறார்.
இதன் மறைபொருளை நாம் இன்று அறிய இருக்கிறோம்.
முதல் உவமை மத்தேயு 20ல் திராட்சை தோட்டத்திற்கு வேலைக்காரர் சேர்க்கும் முதலாளி குறித்தது.
இந்த உவமையை முதலில் காண்போம்.
மத்தேயு 20:1-16. பரலோகராஜ்யம் வீட்டெஜமானாகிய ஒரு மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது; அவன் தன் திராட்சத்தோட்டத்துக்கு வேலையாட்களை அமர்த்த அதிகாலையிலே புறப்பட்டான். வேலையாட்களுடன் நாளொன்றுக்கு ஒரு பணம் கூலிபேசி, அவர்களைத் தன் திராட்சத்தோட்டத்துக்கு அனுப்பினான். மூன்றாம் மணி வேளையிலும் அவன் புறப்பட்டுப்போய், கடைத்தெருவிலே சும்மா நிற்கிற வேறு சிலரைக்கண்டு: நீங்களும் திராட்சத்தோட்டத்துக்குப் போங்கள்; நியாயமானபடி உங்களுக்கு கூலி கொடுப்பேன் என்றான்; அவர்களும் போனார்கள். மறுபடியும், ஆறாம் ஒன்பதாம் மணிவேளையிலும் அவன் போய் அப்படியே செய்தான். பதினோராம் மணிவேளையிலும் அவன்போய், சும்மா நிற்கிற வேறு சிலரைக்கண்டு: நீங்கள் பகல் முழுவதும் இங்கே சும்மா நிற்கிறதென்ன என்று கேட்டான். அதற்கு அவர்கள்: ஒருவனும் எங்களுக்கு வேலையிடவில்லை என்றார்கள். அவன் அவர்களை நோக்கி: நீங்களும் திராட்சத்தோட்டத்துக்குப் போங்கள். நியாயமானபடி கூலி பெற்றுக்கொள்வீர்கள் என்றான். சாயங்காலத்தில், திராட்சத்தோட்டத்துக்கு எஜமான் தன் காரியக்காரனை நோக்கி: நீ வேலையாட்களை அழைத்து, பிந்திவந்தவர்கள் தொடங்கி முந்திவந்தவர்கள்வரைக்கும் அவர்களுக்குக் கூலி கொடு என்றான். அப்பொழுது பதினோராம் மணிவேளையில் வேலையமர்த்தப்பட்டவர்கள் வந்து ஆளுக்கு ஒவ்வொரு பணம் வாங்கினார்கள். முந்தி அமர்த்தப்பட்டவர்கள் வந்து, தங்களுக்கு அதிக கூலி கிடைக்கும் என்று எண்ணினார்கள், அவர்களும் ஆளுக்கு ஒவ்வொரு பணம் வாங்கினார்கள். வாங்கிக்கொண்டு வீட்டெஜமானை நோக்கி: பிந்திவந்தவர்களாகிய இவர்கள் ஒரு மணி நேரமாத்திரம் வேலை செய்தார்கள்; பகலின் கஷ்டத்தையும் வெயிலின் உஷ்ணத்தையும் சகித்த எங்களுக்கு இவர்களைச் சமமாக்கினீரே என்று முறுமுறுத்தார்கள். அவர்களில் ஒருவனுக்கு அவன் பிரதியுத்தரமாக: சிநேகிதனே, நான் உனக்கு அநியாயஞ்செய்யவில்லை; நீ என்னிடத்தில் ஒரு பணத்துக்கு சம்மதிக்கவில்லையா? உன்னுடையதை நீ வாங்கிக்கொண்டு போ, உனக்குக் கொடுத்தது போலப் பிந்தி வந்தவனாகிய இவனுக்கும் கொடுப்பது என்னுடைய இஷ்டம். என்னுடையதை என் இஷ்டப்படிச் செய்ய எனக்கு அதிகாரமில்லையா? நான் தயாளனாயிருக்கிறபடியால், நீ வன்கண்ணனாயிருக்கலாமா என்றான். இவ்விதமாக, பிந்தினோர் முந்தினோராயும், முந்தினோர் பிந்தினோராயும் இருப்பார்கள்; அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.
இந்த உவமையில் வரும் வேலையாள்கள் எல்லாருக்கும் அழைப்பு வந்தது. அனைவரும் அழைப்பை ஏற்றுக் கொண்டு வேலையை செய்தார்கள். முதலில் வந்தோருக்கு ஒரு பணம், பின்னே வந்தோருக்கு அவர்கள் பிரயாசத்திற்கு தக்கதாக கொடுக்கப்படுமென முதலாளி கூறுகிறான். ஆனால் கடைசியில் எல்லாருக்கும் சமமாகக் கொடுக்கின்றான்.
இதில் அழைக்கப்பட்டவர்கள் எல்லா வேலைக்காரர்களுமே. ஆனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் சிலர் என்கிறார். இந்த தெரிந்துகொள்ளப் பட்டவர்கள் யார்?
சரி, அடுத்த உவமையைக் காண்போம்.
மத்தேயு 22:1-14
இதில் அழைக்கப்பட்டவர்கள் எல்லா வேலைக்காரர்களுமே. ஆனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் சிலர் என்கிறார். இந்த தெரிந்துகொள்ளப் பட்டவர்கள் யார்?
சரி, அடுத்த உவமையைக் காண்போம்.
மத்தேயு 22:1-14
- இயேசு மறுபடியும் அவர்களோடே உவமைகளாய்ப் பேசிச் சொன்னது என்னவென்றால்: பரலோகராஜ்யம் தன் குமாரனுக்குக் கலியாணஞ்செய்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது. அழைக்கப்பட்டவர்களைக் கலியாணத்திற்கு வரச்சொல்லும்படி அவன் தன் ஊழியக்காரரை அனுப்பினான்; அவர்களோ வர மனதில்லாதிருந்தார்கள். அப்பொழுது அவன் வேறு ஊழியக்காரரை அழைத்து: நீங்கள் போய், இதோ, என் விருந்தை ஆயத்தம்பண்ணினேன், என் எருதுகளும் கொழுத்த ஜெந்துக்களும் அடிக்கப்பட்டது, எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது; கலியாணத்திற்கு வாருங்கள் என்று அழைக்கப்பட்டவர்களுக்குச் சொல்லுங்களென்று அனுப்பினான். அழைக்கப்பட்டவர்களோ அதை அசட்டைபண்ணி, ஒருவன் தன் வயலுக்கும், ஒருவன் தன் வியாபாரத்துக்கும் போய்விட்டார்கள். மற்றவர்கள் அவன் ஊழியக்காரரைப் பிடித்து, அவமானப்படுத்தி, கொலைசெய்தார்கள். ராஜா அதைக் கேள்விப்பட்டு, கோபமடைந்து, தன் சேனைகளை அனுப்பி, அந்தக் கொலைபாதகரை அழித்து, அவர்கள் பட்டணத்தையும் சுட்டெரித்தான். அப்பொழுது, அவன் தன் ஊழியக்காரரை நோக்கி: கலியாண விருந்து ஆயத்தமாயிருக்கிறது, அழைக்கப்பட்டவர்களோ அதற்கு அபாத்திரராய்ப்போனார்கள். ஆகையால், நீங்கள் வழிச்சந்திகளிலே போய், காணப்படுகிற யாவரையும் கலியாணத்திற்கு அழைத்துக்கொண்டு வாருங்கள் என்றான். அந்த ஊழியக்காரர் புறப்பட்டு, வழிகளிலே போய், தாங்கள் கண்ட நல்லார் பொல்லார் யாவரையும் கூட்டிக்கொண்டுவந்தார்கள்; கலியாணசாலை விருந்தாளிகளால் நிறைந்தது. விருந்தாளிகளைப் பார்க்கும்படி ராஜா உள்ளே பிரவேசித்தபோது, கலியாண வஸ்திரம் தரித்திராத ஒருமனுஷனை அங்கே கண்டு: சிநேகிதனே, நீ கலியாண வஸ்திரமில்லாதவனாய் இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டார். அதற்கு அவன் பேசாமலிருந்தான். அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரரை நோக்கி: இவனைக் கையுங்காலும் கட்டிக்கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றான். அந்தப்படியே, அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.
- கொலை பாதகரை இராஜா தன் படைவிட்டு பட்டிணத்தை அழிக்கின்றான். பின்பு வெளிகளில் சென்று வழியில் இருக்கும் எல்லாரையும், நல்லார் பொல்லார் என வேறு பிரிக்காது எல்லாரையும் விருந்து நடக்கும் மண்டபம் நிறைந்து போகுமட்டும் கொண்டு வரச் சொல்கின்றான்.
- ஆங்கு கலியாண ஆடை அணியாத ஒருவனைக் கண்டு அவனை "சிநேகிதனே ஏன் கலியாண ஆடை அணியாமல் விருந்திற்கு வந்தாய்" என்று கூறி அவனை காரிருளில் போடுகின்றான் இராஜா.
இந்த உவமை முடிந்ததும் சற்று தெளிவாகிறது
1. அழைக்கப்பட்டவர்கள் பாகம் 1: யூதர்கள். ஏனெனில் யூதர்கள் அவர்கள் நடுவில் வந்த தீர்க்கதரிசிகளை கொலை செய்தார்கள். தேவ குமாரன் இயேசுவையும் கொலை செய்தார்கள். கிழக்கிலும் மேற்கிலும் இருந்து வந்து மக்கள் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களோடே பந்தியிருப்பார்கள். ராஜ்யத்தின் புத்திரரோ புறம்பாக இருளிலே தள்ளப்படுவர் என்ற இயேசுவின் வார்த்தையை நினைவு கொள்ளுங்கள். மற்றொரு விருந்து உவமையில் கண்டால், விருந்துக்கு அழைத்த மக்கள் விருந்துக்கு பாத்திரர் அல்ல என்பதை விருந்தை ஏற்பாடு செய்த எஜமான் கூறுகிறார்.
2. அழைக்கப்பட்டவர்கள் பாகம் 2: வழிகளில் இருப்போர், நல்லார் பொல்லார். அரங்கம் நிறைய கூட்டி வருகின்றனர். புறஜாதிகள், அதாவது இயேசுவை ஏற்றுக் கொண்டு இருதயத்தில் விருத்தசேதனம் உள்ளவர்களாய், தேவனுடைய சொல்லுக்கு கீழ்படிந்து வந்தோர்.
3. தெரிந்து கொள்ளப்பட்டோர்: கலியாண வஸ்திரம் அணிந்திருந்தோர். வஸ்திரம் என்பது பல இடங்களில் இரட்சிப்பு என்று பொருள் படுவதை நாம் அறிவோம். இந்த இரட்சிப்பு இல்லாமல் சபைக்கு வந்து செல்பவர்களின் நிலை, கலியாண வஸ்திரம் இல்லாமல் வந்தவனின் நிலையே. துதியின், தீர்க்கதரிசன வரம், அந்நிய பாஷை இவை எல்லாம் இரட்சிப்பு இல்லாவிட்டால் வீணே. வேதத்தில் வாசியுங்கள். உங்களை அறியேன், என்னை விட்டு அகன்று போங்கள் என்று மனுஷகுமாரன் இயேசு கூறுவது யாரை
1. உம்முடைய நாமத்தினால் பிசாசுகளை ஓட்டினோமே
2. உம்முடைய நாமத்தினால் தீர்க்கதரிசனம் உரைத்தோமே
3. உம் வருகைக்காக காத்திருந்தோமே (பத்து கன்னிகைகள் உவமை மத்தேயு 25:1-14)
இந்த உவமைகளைக் காணும் போது நரகத்தில் இன்றைய நாளில் கிறித்தவர்கள் என்று கூறிக்கொள்ளுபவர்களும் இருப்பார்கள். ஏனெனில், அவர்கள் "கலியாண வஸ்திரம்" இல்லாதவர்கள்.
நான் கிறித்தவன் என்பதை விட, கிறித்து என்னில் இருக்கிறார், கிறித்து என்னில் இருந்து கிரியைகளை செய்கிறார், பிதாவின் சித்தத்தை அறிந்துள்ளேன், பிதவின் சித்தத்தை ஆவியானவர் என்னில் நடப்பிக்கிறார் என்பவர்களே தெரிந்து கொள்ளப்பட்டவர்கள், கலியாண வஸ்திரம் தரித்தவர்கள்.
கர்த்தரை பற்றி, பிதாவின் சித்தத்தை அறிந்து, பிதாவின் சித்தத்தை செய்து முடிக்க, ஆவியானவரைப் பெற்றுக் கொண்டு, இயேசுவின் சீஷனாக இப்புவியில் வாழ்க என இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகிறேன். பிதா ஒருவருக்கே துதி கணம் மகிமை எல்லாம் உண்டாவதாக. ஆவியானவர் உங்களை போதித்து வழிநடத்துவாராக. ஆமென்.
அடுத்து: இந்நூல் உருவான விதம்
அடுத்து: இந்நூல் உருவான விதம்
No comments:
Post a Comment