இந்நூல் உருவான விதம்.

தேவ ஆவியானவர் ஒரு அதிகாலை என்னை எழுப்பி இந்த தலைப்பைக் கொடுத்து அதில் வரவேண்டிய மறைபொருள்களின் அட்டவணையை கொடுத்து, புத்தகம் எழுத பணித்தார். சற்று முன்னர் ஒரு கவிதை புத்தகம் ( இயேசு நாதர் வெண்பா) எழுதி அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்று காத்துக்கொண்டு இருந்தேன்.

இந்நிலையில் தேவ ஆவியானவர் இந்த நூலை எழுதச் சொன்னது எனக்கு வியப்பாகவும் அதே நேரம் ஒரு குறிக்கோளை என் மனதில் வைத்ததற்கு மகிழ்வாகவும் இருந்தது.

தலைப்புகளை கொடுத்ததும், இவை மிக எளிமையான இரகசியங்கள் தானே என்று நினைக்கத் தோன்றும். ஆவியானவர் பணித்ததால், இந்த இரகசியங்கள் கிடைக்கப் பெறாத மக்கள் உள்ளார்களே, அவர்கள் அறிய இந்த இரகசியங்கள் எழுதச் சொல்கிறார் போலும், என்று நினைத்து எழுதத் தொடங்கினால், சற்றே வித்தியாசமாக இருந்தது. எனக்கு வெளிப்படுத்திய விஷயங்களை நான் எழுதியுள்ளேன். இது யாருக்கு செல்ல வேண்டுமோ, அவர்களுக்கு சென்றடைய, தேவ ஆவியானவர் தாமே கிரியை புரிவாராக.

இணையத்தில் இந்நூல் இலவசமாக வெளியிடப்படுகிறது. அச்சுப்பிரதி விலை கொடுத்து வாங்குவோர், இந்த புத்தகத்தை தேவையானோரிடம் சேர்க்கவும். படித்த பின்பு இப்புத்தகம் உங்கள் அலமாரியை அலங்கரிக்க விடாதேயுங்கள். எவ்வளவு பேருக்கு இந்த புத்தகம் செல்கிறதோ, அவ்வளவு கிறித்தவர்கள் கர்த்தருடைய இரகசியங்களை அறிவார்கள். இது ஆவியானவரின் அன்புக் கட்டளை

மற்றவருக்குக் கொடுக்கும் போதும் இக்கட்டளையை கூறிவிட்டு கொடுங்கள். நீங்கள் படிக்க இணையத்தில் இலவசமாக இருக்கிறது. 

இணைய முகவரி: http://secretsofkingdomofgod.blogspot.com/

இணைய தளத்தின் வலைக்குறியீட்டை நீங்கள் உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். 

கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. ஆமென்.


அடுத்து: முடிவுரை

No comments:

Post a Comment