3. கேட்கிறவன் எவனும் பெற்றுக் கொள்கிறான். எதை?



வேதத்தில் உள்ள ஒரு பெரிய மறைபொருள் இது. நாம் யோபுவிற்கு நிகழ்ந்ததை படிப்போம்

யோபு 1:7-12
கர்த்தர் சாத்தானைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வருகிறாய் என்றார். சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: பூமியெங்கும் உலாவி, அதில் சுற்றித்திரிந்து வருகிறேன் என்றான். கர்த்தர் சாத்தானை நோக்கி: என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை என்றார். அதற்குச் சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: யோபு விருதாவாகவா தேவனுக்குப் பயந்து நடக்கிறான்? நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? அவன் கைகளின் கிரியையை ஆசீர்வதித்தீர்; அவனுடைய சம்பத்து தேசத்தில் பெருகிற்று. ஆனாலும் உம்முடைய கையை நீட்டி அவனுக்கு உண்டானவையெல்லாம் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்துக்கு எதிரே உம்மைத் தூஷிக்கானோ பாரும் என்றான். கர்த்தர் சாத்தானை நோக்கி: இதோ, அவனுக்கு உண்டானவையெல்லாம் உன் கையிலிருக்கிறது; அவன்மேல்மாத்திரம் உன் கையை நீட்டாதே என்றார்; அப்பொழுது சாத்தான் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டுப்போனான்.


அதன் பின்வரும் நிகழ்வுகள் யோபு புத்தகத்தில் வாசிக்கலாம்.

சாத்தான் யார்? அவன் கேட்டு அவனுக்கு கர்த்தர் ஏன் கொடுக்க வேண்டும்? ஏனென்றால் "கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்கிறான்."

இயேசு தன்னுடைய ஊழியத்தில் கொடுத்த ஒரு பெரிய இரகசியம் இது. கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்கிறான்.

இந்த வாக்குதத்தத்தை வைத்து ஜெபம் செய்த பல கிறித்துவர்கள் பெரிய ஐசுவரியவான்களாக மாறியிருக்கிறார்கள். முந்தைய பகுதியில் கண்டோம், ஐசுவரியம் ஆசீர்வாதமா என்று. அந்த பகுதியை முழுமையாகப் படிக்காமல் இந்த பகுதிக்கு நேராக வந்திருந்தீர்களானால், தயவு செய்து படித்து விட்டு பின் இப்பகுதிக்கு வரவும்.

இப்போது நாம் காணலாம்.... கேட்கிறவன் எவனும் பெற்றுக் கொள்கிறான் எங்கெல்லாம் வருகிறது


மத்தேயுவில் மலை பரப்புரையின் கடைசி அதிகாரத்தில் வருகிறது.

மத்தேயு 7:8 ஏனென்றால், கேட்கிற எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.

இந்த வசனத்தின் பின் ஒரு உவமையை சொல்கிறார்

மத்தேயு 7:9-11. உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக்கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக்கேட்டால் அவனுக்குப் பாம்பைக்கொடுப்பானா? ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?

வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பார் கெட்டவைகளை அல்ல. நன்மையானவைகள் என்றால் ஆசீர்வாதங்கள், வியாதியில் இருந்து சுகம், போன்றவை. ஐசுவரியம் ஆசீர்வாதமாக இருக்கும் வரைக்கும் கொடுப்பார்.

அடுத்த இணையான வசனம் லூக்காவில் பார்ப்போம்

லூக்கா 11:10 ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.

இந்த வசனத்தின் பின் அதே உவமையை சொல்கிறார்

லூக்கா 11: 11-13. உங்களில் தகப்பனாயிருக்கிற ஒருவனிடத்தில் மகன் அப்பங்கேட்டால், அவனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக்கேட்டால் மீனுக்குப் பதிலாய்ப் பாம்பைக் கொடுப்பானா? அல்லது முட்டையைக் கேட்டால், அவனுக்குத் தேளைக் கொடுப்பானா? பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்.

இங்கே பாருங்கள்

வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம்

ஏனென்றால் பரிசுத்த ஆவி கிடைக்கப் பெற்றால் அதுவே உங்களுக்கு போதும்.

கேட்கிறவன் எவனும் பெற்றுக் கொள்கிறான் என்ற இரகசியம் வேலை செய்யும். சரியானபடி அதை உங்கள் ஆசீர்வாதத்திற்கு உபயோகித்தால் மட்டுமே நன்று. சாத்தானைப் போல அடிப்பதற்கும் குலைப்பதற்கும் நீங்கள் உபயோகித்தால், சாத்தானுக்கு என்ன நேருமோ அதுவே தான் உங்களுக்கும் நேரும்.

கேளுங்கள், பெற்றுக்கொள்ளுங்கள் பரிசுத்த ஆவியை. ஆவியானவர் தாமே உங்களை சகல சத்தியத்திற்குள்ளும் வழிநடத்துவார். ஆமென்.

அடுத்த மறைபொருள்: 4. பாடுகள் கிறித்தவர்களுக்கு உண்டா இல்லையா?

No comments:

Post a Comment