சொல்லும் சொற்களில் கவனம் தேவை ஏன்?

ஒரு சிறிய நிகழ்வு. அதை பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு திருச்சபையின் அலுவலகத்தில் ஒரு சகோதரரை காண்பதற்காக அமர்ந்திருக்கிறேன். அங்கு ஒரு வாலிபன் (பகுதி நேர ஊழியம் செய்பவர் என்று நினைக்கிறேன்)

 என் அருகில் இருந்த மற்றொரு வாலிபரை நோக்கி இவர் தனக்கு போதகர் செய்யச் சொன்ன ஒரு வேலைக்கு தேவையான (Mailing Sticker) பொருளை வாங்கி வரச் சொல்லுகிறார்.

வாலிபர் 2: போன வாரம் தானே வாங்கி வந்தேன் அதற்குள்ளாகவா தீர்ந்தது>.

வாலிபர் 1: நீங்கள் வாங்கி வந்ததை விட அதிக தேவை. உடனே சென்று வாங்கி வாருங்கள்

வாலிபர் 2: இன்று ஞாயிறு, ஆதலால் நாளை தான் கடை திறந்திருக்கும்,

வாலிபர் 1: நம் தேவைக்கு ஏற்றபடி சிறிதளவே வாங்கு வாரும்

வாலிபர் 2: அது வரும் அளவு 2000 யூனிட். உங்களின் தேவையோ 150 யூனிட் தான்.

வாலிபர் 1: கடைக்காரரிடம், நாங்கள் அடிக்கடி வாங்குவோம். ஆதலால் இதனை எங்களுக்கு 150 யூனிட் மட்டுமே கொடுங்கள் என்று கூறி 150 யூனிட் மட்டுமே வாங்கி வா..

வாலிபர் 2: அப்படியென்றால் விலை அதிகம் சொல்வார்களே

வாலிபர் 1: கடைக்காரரிடம், நாங்கள் அடிக்கடி வாங்குவோம். ஆதலால் இதனை எங்களுக்கு 150 யூனிட் மட்டுமே கொடுங்கள் என்று சொல்லி அதே விலைக்கு வாங்கி வா. அதிக விலை கொடுக்காதே.

அருகில் இருந்து இந்த உரையாடலை கேட்ட எனக்கு எழுந்த கேள்விகள்.

2000 யூனிட் என்பது ஒரு சிறு பையில் அடங்கிவிடும். அதை சேமிக்க ஒரு அலுவலக மேசை டிராயர் போதுமானது.

1. அடிக்கடி தேவை என்றால் ஏன் 2000 யூனிட் வாங்கி வைக்கக் கூடாது?

2. அடிக்கடி தேவை இல்லை என்றால், அந்த வாலிபர் பொய் சொல்லி வாங்கி வரச் சொல்கிறாரா?

இந்த நிகழ்வு மூலம் ஒரு பெரிய இரகசியத்தை கர்த்தர் எனக்கு போதித்தார்.

வாலிபர் 1 பொய் சொல்லாமல், உண்மையாகவே 150 யூனிட் போதும், பின்னர் வரும் தேவைகளை பின்வரும் நாட்களில் வாங்குவோம் என்றும் கூட நினைத்திருக்கலாம். ஆனால் அதைக் கேட்ட எனக்குள் எழுந்த கேள்விகள் தான் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது.

எந்த நிலையிலும் உன் நாவிலிருந்து வரும் வார்த்தை குறித்து கவனம் தேவை.

எந்த நேரத்திலும் நாவைக் காக்க வேண்டும். நாம் சொல்லும் சொற்கள் மற்றவர்களுக்கு எப்படி போய் சேருகிறது என்று நாம் மிக ஜாக்கிரதையாக இருப்பது வேண்டும். 

இன்னொரு நிகழ்வு, என் வாழ்வில் நடந்தது...

நான் ஒரு நிறுவனத்தில் மேலாளராக பணி புரிந்த காலம்.

ஒரு நேர்க்காணல் (இன்டர்வியூ) எடுத்துக் கொண்டிருக்கிறேன். அது ஒரு தற்காலிக ப்ரொஜெக்ட். அந்த நேர்க்காணலுக்கு வந்த பெண்மணி மிகவும் பொருத்தமான மற்றொரு நிரந்தர வேலைக்கு தகுதியானவர். அவரை  அந்த
நிரந்தர வேலைக்கு எடுக்கும் படி அவரிடம் அவருடைய கைப்பேசி எண் வாங்கி, "உங்களை வேறுவழியாக நாங்கள் பணி அமர்த்துகிறோம்" என்று கூறிவிடுகிறேன்.

அந்த நேர்காணலில் நான் சொன்ன அந்த "வேறுவழி" என்ற சொல் மிக வினையாக முடிந்தது. அந்த நேர்க்காணல் ஏற்பாடு செய்திருந்த பெண்மணி என்மீது பழி போட்டு, தற்காலிக இடத்திற்கு ஆள் எடுக்கச் சொன்னால் எப்படி நீ வேறுவழி என்று அந்தப் பெண்ணிடம் கூறலாம் என்று என் மேலாளர் என்னை கடிந்தார். நல்லது தானே செய்யப் போனேன் என்று நான் வாதாடினேன். ஆனாலும் என் விளக்கத்தை கேட்காத மேலாளர் அந்த பெண்ணை தற்காலிக இடத்திற்கே பணியமர்த்தினார்.

நான் அந்த வேலையை விட்டு நீங்குவதற்கான அடித்தளம் அன்று போடப்பட்டது. சரியாக மூன்றாம் மாதம் மனக்கசப்புடன் அந்த வேலையை விட்டு இராஜினாமா செய்தேன்.

ஒரு தெவையில்லாத சொல்லானது மென்மேலும் எங்கள் உறவை கசப்பாக்கி நான் வேலையை விட வேண்டிய சூழலை உருவாக்கியதை உணர்ந்தேன்.

இந்த இரு நிகழ்வுகளும் ஒரு பெரிய நிகழ்வாக இல்லையென்றாலும், இவை என் வாழ்வை மாற்றிய நிகழ்வுகள்.

இயேசு சொல்கிறார்

மனுஷன் பேசும் ஒவ்வொரு வீணான வார்த்தைக்கும் நியாயத்தீர்ப்பு நாளில் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்

இந்த இரகசியம் எனக்குள் ஒரு பெரிய மாறுதலை உண்டாக்கியது.

நம்மில் பலர் ஏதோ பொழுதுபோக்காக பல வீணான வார்த்தைகளை சொல்கிறோம். அவையெல்லாம் கணக்கு வைக்கப் படுகின்றன!


ஆதலால், சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும் நாம் கவனம் செலுத்த வேண்டும். 

கர்த்தர் உங்களை போதித்து வழிநடத்துவாராக. ஆமென்.

No comments:

Post a Comment