சாபம் கிறித்தவர்களுக்கு உண்டா?

வேதத்தில் ஒரு பகுதியில் பவுல் கூறுகிறார்
    கலாத்தியர் 3:13. ...நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.

நியாயப்பிரமாண சாபம் எது?

    உபாகமம் 27:26. இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளையெல்லாம் கைக்கொண்டு நடவாதவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
கிறித்தவர்கள், யூதர்கள், என எல்லாரும் தேவனுக்கு கீழ்படிந்து நடந்தால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள்.

கீழ்படியாது இருப்பார்களேயானால் சபிக்கப் படுவார்கள். இது நிதர்சன உண்மை.

கலாத்தியர் 3ஐ மேலும் படித்தால் விளங்கும்

    3:24 ....நாம் விசுவாசத்திலே நீதிமான்களாக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது.

வழிநடத்தும் உபாத்தியாய் நியாயப் பிரமாணம் இருந்தது. இதுவும் அறிந்து கொள்ள வேண்டியது. 

அப்படியானால் சாபம் உண்டு.

சாபம் நீங்குவது கடைசி நாட்களிலே.

வெளி 22:3 இனி ஒரு சாபமுமிராது. 

தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிந்தால் அவர் கிருபையை தலைமுறை தலைமுறைகளுக்கு காண்பிப்பவர். கீழ்படியாமல் போனோமென்றால் மூன்றாம், நான்காம் தலைமுறை வரை சாபம் நீடிக்கும் என்று வேதம் சொல்கிறது.

யாத்திராகமம் 34:7 ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்; குற்றவாளியைக் குற்றமற்றவனாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர் என்று கூறினார்.

ஆகையால் சாபம் வருவது இரண்டு வகையில்.

1. நம்முடைய கீழ்படியாமையால் வரும் சாபம்

முதல் சாபம் வருவது நம்மாலேயே. நாம் கீழ்படிந்தால் ஏன் சபிக்கப் படுகிறோம்? ஆதலால் கீழ்படிவோம். நம் வாழ்வும் நம் தலைமுறையினரின் வாழ்வும் நம் கீழ்படிதலில் உள்ளதை அறிவோம்.

2. நம் முன்னோர்களின் கீழ்படியாமையால் வரும் சாபம்

இது மிக வேதனையானது. செய்யாத தப்பிற்கு தன் மேல் சாபம். ஆனால் இது தேவ நீதி. கீழ்படியாமைக்கு கர்த்தர் கொடுக்கும் தண்டனை.

குடும்ப சாபம் என்று இதை அழைப்பர். அடுத்த மறைபொருளில் இந்த குடும்ப சாபத்தை போக்குவது எப்படி என்று காணலாம்.



No comments:

Post a Comment